ஜி.எஸ்.டி.,வரியை ரத்து செய்ய டிச.11 போராட்டம் அறிவிப்பு
திண்டுக்கல்: வாடகை கடை, நிறுவன வணிகர்களுக்கு வாடகை தொகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,வரி விதிக்கும் புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து டிச.11ல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க தலைவர் கிருபாகரன் கூறினார்.அவர் கூறியதாவது: வாடகைக்கு இருக்கும் கடை, நிறுவன வணிகர்களுக்கு வாடகை தொகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,வரி விதிப்பதை அரசு ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே வணிகர்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் இதை எதிர்த்து டிச.11ல் திண்டுக்கல் மெயின் ரோடு மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் ஏராளமான வணிகர்கள் பங்கேற்கின்றனர். இதன்பின்பும் ரத்து செய்யாமல் இருந்தால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.