உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சந்தனகருப்பு சுவாமி கோயில் வருடாபிஷேகம்

சந்தனகருப்பு சுவாமி கோயில் வருடாபிஷேகம்

நத்தம் : நத்தம் அரண்மனை சந்தனகருப்பு சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு நடந்தது. இதை தொடர்ந்து நேற்று வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. யாகசாலையில் வைக்கப்பபட்டிருந்த 108 வலம்புரி சங்குகளும். பூஜை பொருட்களும், புனித தீர்த்த குடங்களும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் மூலவருக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மஹா தீபாராதனைகளும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை