உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

பழநி, செப்.8- பழநி சித்தா நகர் புது நகர் பகுதியில் உள்ள ஞானானாம்பாள் உடனுறை யோகேஸ்வரர் கோயிலில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைத்து விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் ஆகியன நடந்தது. ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீரால் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. மாலை மங்கள வாத்தியத்துடன் யோகேஸ்வரர் ஞானாம்பாள் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. மணக்கோலத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !