மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
26-Jun-2025
நத்தம்: நத்தம் ஆர்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு உர்வலம் நடந்தது. பள்ளி தாளாளர் ஜெரால்டுஸ்டீபன் செல்வா தலைமை வகித்தார். மனிதம் நலவாழ்வு மைய இயக்குநர் விக்டர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் தொடங்கி மூன்றுலாந்தர், பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டு போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசப்பட்டது.
26-Jun-2025