உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போதை தடுப்பு ஊர்வலம்

போதை தடுப்பு ஊர்வலம்

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் துல்கர்னை சிக்கந்தர் நகர் அல்அமானத்துல் ஹிகம் மதரஸா சார்பில் மிலாடி விழாவை முன்னிட்டு போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மதரஸா முதல்வர் அமானுல்லா அன்சாரி தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் எஸ்.ஐ., சிவராஜன் துவக்கி வைத்தார். துல்கர்னை சிக்கந்தர் நகரில் இருந்து துவங்கிய ஊர்வலம் நாகனம்பட்டி ரோடு பழநி திண்டுக்கல் ரோடு ,தாராபுரம் ரோடு பகுதிகளில் சென்றது. நபிகள் நாயகம் வரலாற்றுப் பாடல்கள் , போதை ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது. முஸ்லிம் ஜமாத்தார்கள், மதரஸா மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி