உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருவிழா நடத்த கோரி முறையீடு

திருவிழா நடத்த கோரி முறையீடு

திண்டுக்கல்: நிலக்கோட்டை விளாம்பட்டி நாட்டார்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் கொடுத்தமனுவில் நாட்டார்பட்டியில் ஏழைக்காத்தஅம்மன், ஸ்ரீ வல்லடிகாரர் கோயில்கள்உள்ளது.இக்கோயிலில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பூஜாரியாக இருந்தார்.4 வருடத்திற்கு முன் அவர் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து மற்றொருவர் பூஜாரியாக நியமிக்கப்பட்டார்.ஏற்கனவே பூஜாரியாக இருந்து விலகிச் சென்றவரின் குடும்பத்தினர் மீண்டும் எங்கள் குடும்பத்தினர் தான் பூஜாரியாக இருந்து திருவிழா நடத்த வேண்டும்.இல்லையென்றால் திருவிழா நடத்த அனுமதிக்க மாட்டோம் என பிரச்னை செய்கின்றனர். பிரச்னை இல்லாமல் திருவிழா நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Siva Raman
செப் 20, 2024 11:54

தவறான செய்தி. இது சம்மந்தமாக 4 முறை நிலக்வகோட்ட்டாடை வட்டாச்சியர், விளாம்பட்டி காவல் ஆய்வாளர், பிள்ளையார்நத்தம் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தபட்டு. இருதறப்பும் நீதி மன்றத்தை நட உத்தறவு பிறப்பிக்கபட்டது.


சமீபத்திய செய்தி