உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

கன்னிவாடி : தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் பழநியில் நடந்த யோகாசன போட்டியில் தருமத்துப்பட்டி டி.எம்.பி., நர்சரி துவக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பரிசுக்கோப்பை, சான்றிதழ்களை வென்றனர். இதற்கான பாராட்டு விழா பள்ளி தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் மரியபெர்னத்பிரியா, பாப்பாத்தி பத்மா, ஜோஸ்பினா, சுதிமேரி, தேன்மொழி, ஜெயந்தி, சிவபானுப்ரியா, இந்துரா தேவி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி