தடகள மாணவருக்கு பாராட்டு
திண்டுக்கல் : பீகார் மாநிலத்தில் நடந்த கேலோ இந்தியா இளைஞர் தேசிய தடகள போட்டியில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.,மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவர் சித்தின் அர்ஜூனன் நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம், எடை தாண்டுதலில் 2ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார். பயிற்சியாளர் சந்திரசேகர், சரவண பாண்டிக்கு வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமி,ஆர்டிஸ் அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது. திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியில் உள்ள மைதானத்தில் நடந்த இதற்கு தேசிய ஹாக்கி வீரா ஞானகுரு தலைமை வகித்தார். தேசிய கால்பந்து வீரர் டைட்டஸ் உதவித்தொகை வழங்கினார். மாவட்ட தடகள சங்க தலைவர் துரைரத்தினம், செயலாளர் சிவகுமார் ஆகியோர் பாராட்டினர்.