உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் சட்டசபை குழு ஆய்வு

கொடையில் சட்டசபை குழு ஆய்வு

கொடைக்கானல்: கொடைக்கானலில் தமிழ்நாடு சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தது.தமிழக சட்டசபை பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எம்.எல்.ஏ. ,நந்தகுமார் தலைமையில் உறுப்பினர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கிரி, கோவிந்தசாமி, நாகை மாலி, விஜயபாஸ்கர், வேலு இரு தினங்களாக ஆய்வு செய்தனர்.கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர் . சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி, பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் நடந்து வரும் பராமரிப்பு பணிகள் விரைவில் முடித்திட அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி