உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாரியம்மன் கோயிலில்- நாளை பூக்குழி

மாரியம்மன் கோயிலில்- நாளை பூக்குழி

நத்தம் l நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து மாரியம்மன் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்கினர். நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இன்று பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சியும், அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி வகையறாக்கள் எடுத்து வரப்படும். நாளை முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா, காலையில் கழுகு மரம் ஊன்றப்படும். மாலையில் கழுகுமரம் ஏறிய பிறகு விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்குகின்றனர். அன்றிரவு கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும். மறுநாள் புதன்கிழமை காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட வண்ண பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் வரும். அங்குள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து கோயிலுக்கு சென்று அம்மன் இருப்பிடம் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ