தடகளத்தில் சாம்பியன் ஆன எரியோடு பள்ளி
எரியோடு: திண்டுக்கல்லில் பள்ளி இடையிலான மாநில தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் சந்துரு 100, 200 மீட்டர் ஓட்டங்களில் 2ம் இடம், 11ம் வகுப்பு ஹரிஷ்பெருமாள் 100, 200 மீட்டர் ஓட்டங்களில் முதலிடம், நீளம் தாண்டுதலில் 2ம் இடம் பெற்றார். 9ம் வகுப்பு மாணவி சசிகலா 100, 200 மீட்டர் ஓட்டங்களில் முதலிடம், நீளம் தாண்டுதலில் 2ம் இடம் பெற்றார். 11ம் வகுப்பு மாணவி நந்தினி 100, 200 மீட்டர் ஓட்டங்களில் முதலிடம், நீளம் தாண்டுதலில் 2ம் இடம், தனி நபர் போட்டியிலும் கோப்பை வென்றார். 12ம் வகுப்பு மாணவி வித்யா 100, 200 மீட்டர் ஓட்டங்களில் முதலிடம், குண்டு எறிதலில் 9ம் வகுப்பு மாணவர் சின்னஅழகர் முதலிடம்,தொடர் ஓட்டத்தில் 6ம், 12ம் வகுப்பு மாணவர்கள் வென்றனர். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றதோடு, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷிற்கு சிறந்த பயிற்சி யாளர் பட்டம் கிடைத்தது. தலைமை ஆசிரியர் நிர்மலா, உதவி தலைமை ஆசிரியர்கள் நாகஜோதி, காஜாமைதீன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், சந்திரா பாராட்டினர்.