அளவீடு பணிக்கு சென்ற சர்வேயர் மீது தாக்குதல்
எரியோடு: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே வீட்டடி அளவீடு பணிக்கு சென்ற சர்வேயரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவிலுாார் அருகே ஆர்.புதுக்கோட்டை ஆர்.பி.பள்ளப்பட்டியை சேர்ந்த மாரியம்மாள். தனது வீட்டடி மனையை அளவீடு செய்து தர கேட்டு மனு தந்தார். இதற்காக குஜிலியம்பாறை தாலுகாவை சேர்ந்த சர்வேயரான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆலங்குளத்தை சேர்ந்த பெரியசாமி 38, ஆர்.புதுக்கோட்டை வி.ஏ.ஓ., மல்லிகா 48, ஆகியோர் சென்றனர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சிவா 40, தனக்கு தெரியாமல் எப்படி அளவீடு பணி செய்யலாம் என கூறி வாக்குவாதம் செய்து சர்வேயர் முகத்தில் குத்தினார். அருகில் கிடந்த கட்டையாலும் தாக்கினார். காயமடைந்த அவரை கிராமத்தினர் மீட்டு வேடசந்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்கிய சிவா தென்காசியில் நிதி நிறுவனம் நடத்துகிறார். அவரை எரியோடு போலீசார் தேடுகின்றனர்.