கொலை முயற்சி: 7 ஆண்டு சிறை
திண்டுக்கல்: பட்டிவீரன் பட்ட கொன்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சோனியா. இவர் 2016 ஆகஸ்டில் சிசிக்சைக்காக தன் தந்தை செல்லபாண்டி வீட்டிற்கு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி 29, கேலி கிண்டல் செய்துள்ளார். சோனியாவின் அண்ணன் துரைப்பாணடி தட்டி கேட்டுள்ளனர். கணேசமூர்த்தி அவரது சகோதரர் பழனிகுமாருடன் 32, வந்து துரைப்பாண்டியை அரிவாளால் வெட்டினர். தடுத்த கிருஷ்ணமூர்த்திக்கும் காயம் ஏற்பட்டது. இதன் வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடந்தது. பழனிகுமார் இறந்த நிலையில் கணேசமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறை ரூ.11,500 அபராதம் விதித்து நீதித்துறை நடுவர் கனகராஜ் உத்தரவிட்டார்.