உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புத்தகங்களே கம்பீரமானவர்களாக மாற்றும் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு

புத்தகங்களே கம்பீரமானவர்களாக மாற்றும் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு

திண்டுக்கல் : ''புத்தகங்கள் உங்களை கம்பீரமானவர்களாக மாற்றும்'' என எழுத்தாளர் கிருஷ்ணகுமார் பேசினார்.திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்,இலக்கிய களம் இணைந்து டட்லி பள்ளி மைதானத்தில் நடக்கும் 11வது புத்தகத் திருவிழாவில் அவர் பேசியதாவது: தற்போது மனிதர்கள் மாறிவிட்டார்கள். காகம் இரும்பு கம்பிகளால் கூடு கட்ட ஆரம்பித்து விட்டது .இது பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது. புத்தகங்கள் மூலம் வரலாறு பதிவு செய்யப்படுகிறது. புத்தகம் என்பது மந்திர கம்பளமாக திகழ்கிறது. புத்தகங்கள் உங்களை கம்பீரமானவர்களாக மாற்றும். உலகம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் ஆனது. பாறைகள் மழை நீரை குடிக்கிறது. அதன் பின் அவைகள் வெளியேற்றும் நீர் ஓடையாக மாறுகிறது. கடலில் உள்ள மீன்களுக்கு நதிகள் உணவு கொண்டு போய் சேர்க்கிறது என்றார்.திண்டுக்கல் இலக்கிய கள இணை செயலாளர் தங்கம் தலைமை வகித்தார். வைகறை பதிப்பகம் ஸ்டீபன் பேசினார். துணைத் தலைவர் சரவணன் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ