வீரர்களுக்கு விருது வழங்கல்
திண்டுக்கல் : திண்டுக்கல் மலைக்கோட்டை ஹாக்கி மைதானத்தில் பட்டேல் அகாடமி,வி.ஜி.ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்துதேசிய அளவில் பல்வேறு விளையாட்டு துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காஜாமைதீன்,மாநகர கிழக்கு தி.மு.க., செயலாளர்ஜேந்திரகுமார், சமூக ஆர்வலர் சகாய செல்வராஜ் வழங்கினர். மாவட்ட யோகா சங்கச் செயலாளர் நித்யா, மாவட்ட ஹாக்கி சங்க உதவி செயலாளர் ஆரோக்கிய சகாய அமுதா, உடற்பயிற்சி ஆசிரியர்கள்பாஸ்கர், செல்வி, மதர் தெரசா பல்கலை பயிற்சியாளர் பிரிட்டோ, ஹோலி கிராஸ் பெண்கள் மாவட்ட ஹாக்கி சங்க துணைத்தலைவர் ஞானகுரு பங்கேற்றனர்.