விழிப்புணர்வு முகாம்
கன்னிவாடி: கன்னிவாடி அரசு சமுதாய நல நிலையத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ஆராதனா தலைமை வகித்தார்.சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், தர்மராஜ், ஆலிவர், ஜெயராம், அரவிந்த், சீனிவாசன், வசந்த் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் பேசினார்.--