உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

செம்பட்டி: செம்பட்டி பசுமைக்குறள் அமைப்பு காமுபிள்ளை சத்திரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை வகித்தார். ஆசிரியை பிரேமா வரவேற்றார். நீர்நிலைகள் பாதுகாப்பு குழு தலைவர் செல்வராஜ், புரவலர் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் இளன்பரிதி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ராமு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தினார். ஆறாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த 30 மாணவர்களுக்கு, நெல்லி மரக்கன்று, மஞ்சப்பை, திருக்குறள் புத்தகம், திருக்குறள் வினா விடை தொகுப்பு வழங்கப்பட்டன.பள்ளி வளாகத்தில் தென்னை, கொய்யா மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் விஜய் செய்திருந்தார். தன்னார்வலர்கள் பால்பாண்டி, சதீஷ் பங்கேற்றனர். ஆசிரியர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ