உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் துறை,வனத்துறை அதிகாரிகள் சார்பில் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் தொடர்பாகவும், பசுமை தீபாவளி கொண்டாடுவது தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம்,வனத்துறை மூலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தனர். மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,வன விரிவாக்க அலுவலர் வேல்மணி நிர்மலா,மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் அனிதா, தாரணி முதலமைச்சரின் பசுமை தோழி செல்லி கார்த்திகா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை