விழிப்புணர்வு பயிற்சி
ஒட்டன்சத்திரம் : பழனியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் வாசுகி தொடங்கி வகித்தார். வணிகவியல் துறை தலைவர் யமுனாதேவி வரவேற்றார். வாழ்வாதார இயக்கம் காவியா, கார்த்திகா பேசினார். உதவி பேராசிரியர் மஞ்சு நன்றி கூறினார்.