மேலும் செய்திகள்
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
29-Jul-2025
திண்டுக்கல் : புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கல்லுாரி மாணவிகள் 5000 பேர் 'திண்டுக்கல் வாசிக்கிறது' என்ற வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்ட 12 வது புத்தகத் திருவிழா ஆக.28 முதல் செப். 7- வரை திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லுாரியில் இது தொடர்பான விழிப்புணர்வு முன்னேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 5 ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டு' திண்டுக்கல் வாசிக்கிறது' என்ற வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் லெட்சுமி, திண்டுக்கல் இலக்கிய களம் தலைவர் மனோகரன் கலந்து கொண்டனர். நேற்று வழக்கத்தை விட வெயில் சுட்டெரிக்க இதில் பங்கேற்ற மாணவிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். வெயில் கொடுமையால் தலையில் சுடிதார் துப்பட்டாவை போர்த்தியப்படி அமர்ந்திருந்தனர். இதன் பாதிப்பில் மாணவி ஒருவர் மயங்கினார்.இது போன்ற நிகழ்ச்சிக்கு மாவட்டம் முழுவதுமிருந்து மாணவிகளை அழைத்து வந்து அவர்களை வெட்ட வெளியில் அதுவும் வெயிலில் அமர்த்திருந்தது பெர்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
29-Jul-2025