உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்; வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்; வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

திண்டுக்கல், நவ. 23- -ஐயப்ப சீசன் தொடங்கியுள்ள நிலையில் பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள் பஸ்கள் வந்து செல்லும் வழிகள் முறையாக இல்லாததால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு கார்த்திகை துவங்கி வைகாசி வரை ஐயப்ப பக்தர்கள் வருகை, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என 7 மாதங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.தற்போது சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆனால் பார்க்கிங் , வெளியூர் பக்தர்களின் பஸ்கள் வந்து செல்லும் வழிகள் சரிவர இல்லை. குறிப்பாக கிழக்கு கிரிவீதியில் உள்ள பெரிய பார்க்கிங்கிற்குதான் பெரும்பாலான வாகனங்கள் குவிகின்றன. 2023ல் இந்த பார்க்கிங் பின்புறம் வழியாக புறநகர் பைபாைஸ அடைய தற்காலிக வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.பழநியாண்டவர் கல்லுாரி வழியாக பார்க்கிங்கிற்கு வரும் வாகனங்கள் இவ்வழியாக வெளியேறும்.ஆனால் தற்போது சீசன் தொடங்கியும் போதிய வசதிகள் செய்யப்படவில்லை.பார்க்கிங்கிலிருந்து பைபாஸ் செல்லும் வழியும் முறையாக இல்லை. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. உரிய வசதிகளை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கூறியதாவது:பஸ்கள் மூலம் வரும் வெளியூர் பக்தர்களுக்கென எந்தவித வசதியும் தற்போது வரை இல்லை. பொதுப்போக்குவரத்து மூலம் வரும் பக்தர்கள் ஆட்டோ, குதிரை வண்டிகள் வாயிலாக அடிவாரம் வருவர். தற்போது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பெரும்பாலன இடங்களில் பேரிகாட் போட்டு அடைத்துள்ளனர்.இதனால் பக்தர்கள் நீண்ட துாரம் நடந்து வரும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கும் இலவச வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.பக்தர்களின் வருகைக்கேற்ப நடமாடும் மருத்துவ வாகனங்களை ஏற்படுத்த வேண்டும்.தற்போது ஏற்படுத்தப்பட்டிற்கும் குடிநீர், பார்க்கிங், இலவச கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் சீசன் இல்லாத காலங்களில் வரும் பக்தர்களுக்கான அளவில் மட்டுமே உள்ளன.போர்க்கால அடிப்படையில் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
நவ 23, 2024 06:18

பழனி, ஸ்ரீரங்கம், திருவாநைக்கோவில் போன்றவை சிற்றூர்கள். அங்கே வசதிகள் குறைவு. உள்ளூர் ஆளுங்களுக்கே வசதிகள் போறாது. இதிலே ஈ மொய்க்க மாதிரி காலை அஞ்சு மணிக்கே கூட்டம் அலை மோதுது. வசதியை என்ன மேம்படுத்துவது? நேரா சபரி மலைக்கு போயிட்டு வீட்டுக்குப் போங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை