உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மயான பகுதியில் ஆண் சிசு

மயான பகுதியில் ஆண் சிசு

செந்துறை: திண்டுக்கல் மாவட்டம் செந்துறை மாமரத்துப்பட்டி மயான பகுதியில் உயிருடன் ஆண் சிசுவை வீசி சென்றவரை போலீசார் தேடுகின்றனர். மாமரத்துப்பட்டி மயான பகுதி அருகில் நேற்று முன்தினம் இரவு பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் கற்களுக்கு இடையே தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. 108 ஆம்புலன்சில் இன்கு பேட்டர் மூலம் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு உள்ள குழந்தை பராமரிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை வீசி சென்றவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ