மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
திண்டுக்கல்: ரோட்டரி கிளப் ஆப் மிட்டன், அனுகிரகா இண்டர்நேஷனல் பள்ளி இணைந்து திண்டுக்கல் மாவட்ட அளவிலான தனியார் பள்ளிகளுக்கிடையேயான பாட்மின்டன் டோர்னமென்ட் நடத்தியது. டி.எஸ்.பி., சிபிசாய்சவுந்தர்யன் துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். முதல்வர் அனீஸ்பார்த்திமா வரவேற்றார். அனைத்திந்திய கட்டுமான சங்க திண்டுக்கல் கிளை ,மாவட்ட பேட்மிட்டன் அசோசியேசன் இந்நிகழ்வின் டைட்டில் ஸ்பான்ராக நிதியுதவி செய்தனர். 18 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 172 மாணவர்கள் பங்கேற்றனர். ரோட்டரி சங்க தலைவர் நாகராஜன், கட்டுமான சங்க தலைவர் பால்ராஜ், செயலர் நாராயணன் பங்கேற்றனர். பள்ளி நிர்வாக அலுவலர் பீட்டர் நன்றி கூறினார்.
27-Jan-2025