உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோபிநாத சுவாமி கோயிலில் பாலாபிஷேகம்

கோபிநாத சுவாமி கோயிலில் பாலாபிஷேகம்

கன்னிவாடி: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில் பாலாபிஷேகம் செய்தனர்.ரெட்டியார்சத்திரம் அருகே மலைக்குன்றில் கோபிநாத சுவாமி கோயில் உள்ளது. கால்நடை வளர்ப்போர், வேண்டுதல் நிமித்தமாக கால்நடை உருவம் சமர்ப்பித்தல், பால் அபிஷேகம் செய்வது வழக்கம். நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மூலவருக்கு 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து உற்ஸவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி