மாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை
பழநி : பழநி கிழக்குரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடக்க உள்ளது. நேற்று காலை கோயில் பாலாலய பூஜை, விமான பாலாலய பூஜை சிறப்பு யாக பூஜை நடந்தது. பாலாலயம் அத்தி மரத்தில் செய்யப்பட்டது. வாஸ்து பூஜை, கோ பூஜை நடந்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து திருப்பணிகளை துவங்கி வைத்தார். உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர் அழகர்சாமி, ஸ்தபதி பங்கேற்றனர்.வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி துவக்கமாக பாலாலய பூஜைகள் நடந்தது. 2013ல் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் தற்போது 11 ஆண்டுகள் நிறைவடைந்தது. திருப்பணியில் பங்கேற்க நன்கொடையாளர்கள் தயாராக இருந்த நிலையில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அனுமதி வழங்கியது. இதனையடுத்து கும்பாபிஷேக திருப்பணி துவக்கமாக சன்னதி முன்பாக பாலாலய பூஜைகள் நடந்தது. நவம்பர் இறுதியில் வடமதுரையில் இருக்கும் பகவதியம்மன், முத்தாலம்மன், மாரியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜை நடந்து திருப்பணி துவங்கியது குறிப்பிடத்தக்கது.