உள்ளூர் செய்திகள்

கோயிலில் பாலாலயம்

நத்தம் : -நத்தம் அருகே மெய்யம்பட்டி மல்லாண்டேஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலில் கோபுரங்கள் சிதிலமடைந்தும், சேதமடைந்தும் உள்ளன. இதை தொடர்ந்து இக்கோயிலில் கட்டுமானப் பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் பாலாலயம் பூஜைகள் நடந்தது. இதன் பின் கட்டுமான திருப்பணிகள் தொடங்கியது. சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !