உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தாராளம் :

தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தாராளம் :

-ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதால், பயன்பாடு அதிகரித்துள்ளது. பெயரளவில் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை இருப்பதால் முற்றிலும் ஒழிக்க முடியாத நிலை நீடிக்கிறது. தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019ல் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. மளிகைக் கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், திரை அரங்குகள் பேக்கரிகள், இறைச்சிக் கடைகள், காய்கறி கடைகள் உட்பட அனைத்து இடங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேரி பைகள் உபயோகம் அதிகரித்துள்ளது. இவை தாராளமாக கிடைப்பதால் இவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் இயற்கையாக மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தை பாழ்படுத்தி வருகிறது. இவை நீராதாரங்கள், வடிகால்களை அடைத்துக் கொள்வதால் நீரோட்டம் தடைபடுகிறது. நீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குப்பைகளுடன் சேர்த்து கழிவுகளாகக் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பிரித்து எடுக்கப் படாமல் அப்படியே மக்கும் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படுவதால் அவற்றின் புகையிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாகும். மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து திடக்கழிவு மேலாண்மையை அனைத்து ஊராட்சிகளிலும் தீவிரமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 70 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் மறு உபயோகமின்றி தூக்கி எறியப்படுகிறது. பல வகையான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்தாலும் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவது என்னவோ ஒருமுறை மட்டுமே உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தாள்,பிளாஸ்டிக் பைகள் மட்டுமே. கடைகளில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து இவற்றின் விற்பனையை கண்காணிக்க வேண்டும். இத்துடன் இவை உற்பத்தி செய்யும் இடங்களை கண்டறிந்து சீல் வைக்க வேண்டும். 'மஞ்சள் பை' திட்டத்தை நகரம், கிராமப் பகுதிகளிலும் தீவிரமாக செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும். * தொடர் நடவடிக்கை தேவை எதிர்கால சந்ததியினர் நலனை கருத்தில் கொண்டு நாமும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதை தவிர்த்தால் விற்பனை செய்வது நின்றுவிடும். ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பதை அரசு தடை செய்ய வேண்டும். மண்ணை மடலாக்கும், சுற்றுச்சூழலை பாதிக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்போம். இதனை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெளியில் கிளம்பினால் ஒரு துணி பையுடன் செல்வதன் மூலம் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் முயற்சிக்கலாம். இதற்கு மாற்றாக வாழை இலை, பாக்குமட்டை தட்டு, காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி உலோகத்தாலான டம்ளர்கள், மூங்கில் மரம் மண் பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், துணி காகிதம், சணல் பைகள், காகிதம், துணி கொடிகள், மண் பாத்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தலாம். மளிகைக் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக முன்பு போல காகித கவர்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். - ஜெயக்குமார், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர், பா.ஜ., திண்டுக்கல் மேற்கு, ஒட்டன்சத்திரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Subramanian
செப் 26, 2025 06:16

They should stop manufacturing such plastic. Once side they allow manufacturing and another side they stop selling. If you plug the source it will automatically stop. This news often is periodical one just to satisfy ourselves


சமீபத்திய செய்தி