வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்
வேடசந்துார்: வேடசந்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடந்தது. தேர்தல் பார்வையாளர்களாக வழக்கறிஞர்கள் ஜெயந்தி,கமலம் பங்கேற்றனர். சங்கத் தலைவராக பி.முருகேசன், துணைத் தலைவராக கந்தசாமி, பொருளாளராக பகவத்சிங், துணைச் செயலாளராக பாண்டியராஜன் தேர்வு செய்யப்பட்டனர்.செயலாளர் பதவிக்கு முன்னாள் செயலாளர்கள் பாலமுருகன், தங்கவேல்முனியப்பன் இடையே நடந்த போட்டியில் பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டார்.