குளியல் தொட்டி திறப்பு
நத்தம் : நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய குளியல் தொட்டி கட்டப்பபட்டு அதற்கான திறப்பு விழா நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் திறந்து வைத்தார். தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய இணைச் செயலாளர் விஜயன், மாவட்ட கவுன்சிலர் பார்வதி மணிகண்டன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், ஊராட்சி தலைவர் ஆண்டிச்சாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் மூங்கில்பட்டி கண்ணன்,நகர அவைத் தலைவர் சேக்ஒலி, ஒன்றிய கவுன்சிலர் பூமாபொன்னன் கலந்து கொண்டனர்.