உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மக்காச்சோளத்தில் பாரதியார் ஓவியம்

 மக்காச்சோளத்தில் பாரதியார் ஓவியம்

தொப்பம்பட்டி: பழநி தும்பலபட்டியில் செயல்பட்டு வரும் சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஓவியத்தை மக்காச்சோளத்தால் உருவாக்கினர். மகாகவி பாரதியாரின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்பதாம் வகுப்பு பயிலும் 20 மாணவர்கள் இணைந்து பாரதியாரின் ஓவியத்தை 10 கிலோ மக்காச்சோளத்தால் 11 அடி உயரம் ஆறு அடி அகலத்தில் உருவாக்கி உள்ளனர். மாணவர்களை சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் உதயகுமார், தலைமை ஆசிரியர் ரச்சுமராஜ், உதவி தலைமை ஆசிரியர் தெய்வநாயகி, தமிழ் ஆசிரியை பொன்னுத்தாய், ஓவியாசிரியர் விஜி ,ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ