பூமிபூஜை -
நத்தம்; நத்தம் பண்ணியாமலையில் ரூ.10 லட்சம் மதிப்பில் வண்ணக்கல் பதிக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். நத்தம் அருகே ஆவிச்சிபட்டி ஊராட்சி பன்னியாமலையில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் வண்ணக்கல் பதிக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை வகித்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார். ஜெ., பேரவை இணை செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் சின்னு, மணிகண்டன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.