பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு
பழநி: பழநியில் பா.ஜ., சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. பழநி, கொடைக்கானல் ரோடு அருகே பழநியாண்டவர் திடலில் பா.ஜ. கட்சி சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பங்கேற்றார். இதில் பழநி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தை வெற்றி பெற வைக்க பூத்து கட்டி உறுப்பினர்கள் செயல்பட அறிவுரைகள் வழங்கப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஜெயராமன், மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் மதன்குமார், செயலாளர் ஸ்ரீதர், நகரத் தலைவர் ஆனந்தகுமார் மற்றும் கொடைக்கானல், பழநி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.