தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி; பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
பழநி : '' தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்துவிடும்''என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நடந்த பா.ஜ., புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., -தி.மு.க., இடையே விரிசல் உள்ளது. காங்., அந்த கூட்டணியில் தொடருமா என தெரியவில்லை. மாநில ஆட்சிக்கு எதிராக மக்கள் போர் குரல் எழுப்பும்போது எத்தனை ஆயிரம் ரூபாய் ஓட்டுக்கு வழங்கினாலும் எதுவும் மாறாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p3j0sn4i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நான்கு ஆண்டுகளாக மாநில அரசு எதுவும் செய்யவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால் விபத்துகளில் இறந்தவர்களுக்கு ரூ.இரண்டு லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என கூறப்பட்டது. அது எவ்வாறு முடியும் .ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதனை நாம் தான் நிறைவேற்ற வேண்டியிருக்கும். கரூரில் 41 பேர் இறந்துள்ளனர். இதற்கு செந்தில்பாலாஜி தான் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும். இந்த சூழலில் தான் நாம் தேர்தலை சந்திக்க உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் வந்துவிடும். கூட்டணி குறித்து ஜன.,10 க்கு மேல் முடிவு செய்யப்படும். எங்கு சென்றாலும் நரேந்திர மோடியின் பெயரை மட்டுமே சொல்லுங்கள் .அவரது பெயரை சொன்னாலே மக்கள் ஏற்று கொள்கிறார்கள் என்றார். தேசிய மகளிர் அணி தலைவர் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராகிம், அணிப்பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன், இளைஞர் அணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி. சூரியா, விவசாய அணி தலைவர் நாகராஜ், மாவட்டத் தலைவர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் பங்கேற்றனர். மக்களை ஏமாற்றும் திராவிட மாடல் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இரண்டு அணி நிற்கலாம், மூன்று அணி நிற்கலாம். ஆனால் வெற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தான். இன்று துவங்க உள்ள சுற்றுப்பயணத்தில் தி.மு.க. நான்கரை ஆண்டு காலம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்பதை எடுத்து சொல்ல உள்ளோம். மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் அரசு. சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகள் கூண்டுக்குள் தான் உள்ளன. இந்த கூண்டுகளை எடுக்க வேண்டும். அதன் பிறகு ஜாதி பெயர் மாற்றம் குறித்து பேச வேண்டும். பழைய காலத்தில் தமிழகத்திலும், தற்போது வரை வட இந்தியாவிலும் சாதி பெயர்கள் சேர்ந்து தான் அழைக்கப்படுகின்றன. பாரம்பரியமாக உள்ளதை மாற்றுவது சரியாக இருக்காது என்றார்.