மேலும் செய்திகள்
ஆண்டுதோறும் ரத்தத்தின் தேவை அதிகரிப்பு
01-Oct-2024
வேடசந்துார் : வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் பல இடங்களில் ரத்தம் சிந்தி கிடப்பதாக தகவல் வைரலானது . ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதோ என்றப்படி வேடசந்துார் போலீசார் விசாரித்தனர்.இரவு நேரத்தில் பள்ளி உள்ளே புகுந்த இரு குரங்குகள் ஜன்னல் கம்பிகளில் ஏறி டியூப் லைட்டை உடைத்து விளையாடி உள்ளன. இதில் உடைந்த டியூப் லைட் பட்டு ஒரு குரங்கின் காலில் ரத்தம் வடிந்துள்ளது. ரத்தம் வடிந்த நிலையில் மேஜை , சுவர் என பல இடங்களில் சென்ற போது ரத்தம் படிந்தது தெரிந்தது. அதே நேரத்தில் குரங்கு அங்கே மலம் கழித்துள்ளதை பார்த்த பிறகு தான் குரங்குகளின் சேட்டை தெரிய போலீசார் நிம்மதியடைந்தனர்.
01-Oct-2024