கடைக்காரர் திட்டியதால் சிறுவன் தற்கொலை
நத்தம்,:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -காமராஜ் நகரை சேர்ந்த திருப்பதி மகன் முகிலரசன் 14.இவர் மூன்றாம் வகுப்பு வரை படித்துவிட்டு பஸ்ஸ்டாண்ட் தள்ளுவண்டி கடலை கடையில் வேலை பார்த்து வந்தார். அக்கடைக்காரர் முகிலரசனை திட்டி உள்ளார். இதில் மனமுடைந்த சிறுவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரித்தார்.