உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொடரும் நாய்க்கடி சிறுவன் படுகாயம்

தொடரும் நாய்க்கடி சிறுவன் படுகாயம்

கொடைக்கானல்: - கொடைக்கானலில் தெருநாய்கள் கடித்து சுற்றுலா பயணிகள் ,பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.கொடைக்கானலில் பெருகியுள்ள தெரு நாய்களால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்கிறது. கட்டுப்படுத்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ப்ளூ கிராஸ் அமைப்பும் இதில் அக்கறை காட்டுவதில்லை. சில நாட்களுக்கு முன்பு தெருநாய்கள் கடித்ததில் 9 பேர் பாதிக்கப்பட்டனர்.நாயுடுபுரம் பகுதியில் 3 வது படிக்கும் பள்ளி சிறுவனை நாய்கள் கடித்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரியில் மட்டும் கொடைக்கானல் நகர் பகுதியில் தெரு நாய்கள் கடிக்கு 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ