/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடுமாற விடும் தடுப்பில்லா பாலங்கள்; பயத்துடன் பயணிக்கும் பயணிகள்
தடுமாற விடும் தடுப்பில்லா பாலங்கள்; பயத்துடன் பயணிக்கும் பயணிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளின் மேல் உள்ள ரோடு பாலங்களில் பெரும்பாலும் தடுப்பு சுவர்கள் இல்லாமல் வெறுமனே உள்ளன. அப்படியே இருந்தாலும் சேதமாகி உள்ளது. எதிர்புறம் வரும் வாகனங்கள் செல்ல சற்று ஒதுங்கினால் ஆற்றில் கவிழும் நிலையே உள்ளது. இதிலும் பாதசாரிகள், டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தினை சந்திக்கின்றனர். இது போன்ற தடுப்பு சுவர் இல்லாத ரோடு பாலங்களை கண்டறிந்து தடுப்பு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் முன் வர வேண்டும்.