உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அங்கன்வாடி மையத்திற்கு கட்டடம்

அங்கன்வாடி மையத்திற்கு கட்டடம்

வடமதுரை: கொம்பேரிபட்டி அங்கன்வாடி மையத்திற்கு தினமலர் செய்தி எதிரொலியாக சொந்த கட்டடம் கட்டி நேற்று திறக்கப்பட்டது.கொம்பேரிபட்டியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அங்கன்வாடி செயல்பட அனுமதி கிடைத்தது. ஆனால் சொந்த கட்டடமின்றி பழைய ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையுடன் செயல்பட்டது. இதுவும் பழுதாகி குழந்தைகளும், ஊழியர்களும் சிரமப்பட்டனர். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பழுதான கட்டடம் இடிக்கப்பட்டு ரூ.16.55 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் தலைமையில் நடந்தது. ஒன்றிய தலைவர் தனலட்சுமிபழனிச்சாமி முன்னிலை வகித்தார். ஐ.சி.டி.சி., அலுவலர் செல்வி வரவேற்றார். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் திறந்து வைத்தார். அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் கருப்பன், நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை