உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் ஸ்டாண்ட்களில் துாய்மை, பராமரிப்பு இல்லவே இல்லை: அக்கறை இல்லாத அதிகாரிகளால் அல்லல்

பஸ் ஸ்டாண்ட்களில் துாய்மை, பராமரிப்பு இல்லவே இல்லை: அக்கறை இல்லாத அதிகாரிகளால் அல்லல்

மாவட்டம் ஆன்மிகம், சுற்றுலா என பன்முக சிறப்புகளை கொண்டது. தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய வழியாக திண்டுக்கல் உள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டைப் பார்த்தாலே முகம் சுளிக்கும் சூழல் தான் நிலவுகிறது. எங்கு திரும்பினாலும் துார்நாற்றம் வீசும் நிலையை பார்க்க முடியும். பயணிகள் மூக்கை பொத்திக் கொண்டுதான் சென்று வருகின்றனர். நிழற்குடை , பயணிகள் காத்திருப்பு பகுதி என எந்தவித அடிப்படை வசதிகளுமே இங்கு இல்லை. நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கை வைத்து ஒரு முன்னேற்றமும் இல்லை. முறையாக துாய்மைப் பணிகள் கூட மேற்கொள்வதில்லை. கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட், வத்தலகுண்டு என மாவட்டத்தில் எந்த பஸ் ஸ்டாண்ட்களிலும் போதிய வசதிகள் இல்லை.வெளியூர்களிலிருந்து வருவோர் பஸ் ஸ்டாண்ட்களை பார்த்ததுமே திரும்பிச் செல்லும் நிலையில் தான் உள்ளன. ஆனால் கடைகளுக்கான வாடகை வசூல், பஸ்களுக்கான வசூல் என வருவாய் ஈர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர். பயணிகளின் நலனுக்காக எந்தவித வசதிகளும் செய்து கொடுப்பதில் நாட்டம் காண்பிப்பதில்லை.ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடமும் மறைமுக வசூலில் ஈடுபட்டு அனைத்தையும் அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். பாதுகாப்பு வசதிகள், நேர பலகைகள், வழிகாட்டிகள் என பயணிகளுக்கு அத்தியவசியமான எதையும் காண முடிவதில்லை. குடிநீர் வசதி போதுமான அளவிற்கு இல்லை. கழிப்பறைக்குள் செல்லவே முடியாத சூழல் இருக்கிறது. சில நேரங்களில் துாய்மை பணிகள் நடந்தாலும் பயணிகளில் சிலர் அதனை மீண்டும் அசுத்தமாக்கி விடுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை