வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கூடுதல் பேருந்து இயக்குவது சாத்திய குறைவான விஷயம் . பள்ளி தொடங்கும் நேரத்தை முன்பின்னாக மாற்றியமைத்தால் நன்மை தரும் .
correct
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அதிகம் உள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல சலுகைகள் தொடர்வதால் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் கூட லட்சக்கணக்கான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி நேரத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி மாணவர்களின் படிக்கட்டு பயணம் தொடர்கதையாக உள்ளது. சாகசம் செய்வதாக நினைத்துக்கொண்டு ஆபத்தினை உணராமல் படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர். பல நேரங்களில் இப்பயணம் ஆபத்தில் முடிகிறது. இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி நேரத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. அதிகம் செல்லும் வழித்தடங்களை கண்டறிந்து பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள வழித்தடங்களில் பள்ளி மாணவர்கள் மட்டும் என்ற போர்டுடன் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளுக்கு படிக்கட்டு பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்க வேண்டும்.
கூடுதல் பேருந்து இயக்குவது சாத்திய குறைவான விஷயம் . பள்ளி தொடங்கும் நேரத்தை முன்பின்னாக மாற்றியமைத்தால் நன்மை தரும் .
correct