உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலதிபர் இல்ல திருமண விழா

தொழிலதிபர் இல்ல திருமண விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட தி.மு.க., இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் அசன் முகமது இல்ல திருமண விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட தி.மு.க., இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் தொழிலதிபர் சித்தாரா அசன் முகமது மகன் முகமது பஹீமிற்கும், திருநெல்வேலி தொழிலதிபர் நிஸார் பாசில் மகள் தாஜ் உக்காஷியா பேகத்திற்கும் இஸ்லாமிய முறைப்படி திண்டுக்கல் ஜி.டி.என்., சாலையில் உள்ள எம்.எஸ்.பி., ஆடிட்டோரியத்தில் திருமணம் நடந்தது. இஸ்லாமிய மத குருக்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, பகுதி செயலாளர்கள் சந்தோஷ், ஜானகி ஹக்கு, சூசை ராபர்ட், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஜெயின், தொழிலதிபர் அம்பை ரவி, பி.எம்.எஸ்.,முருகேசன், பிரமுகர்கள் கலந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏற்பாடுகளை மணமகன் சகோதரர் முகமது காசிம் ரியாஜ், மைத்துனர் நைமுதீன் முகமது அப்துல் காதர் கவனித்தனர். ஸ்ரீஅம்மன் ப்ளூ மெட்டல் உரிமையாளர் மயில்வாகனன், அரசு ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி, தேவர் ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் ரமேஷ், ஸ்ரீஅம்மன் எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் கண்ணன், ஸ்ரீஆதித்யா ப்ளூ மெட்டல்ஸ் இயக்குனர் கண்ணன், சித்தாரா புரமோட்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் உரிமையாளர் அமானி அபு அய்யூப் அன்சாரி, இன்ஜினியர் முகமது காசிம் அர்ஷத், முகில் வணிக உரிமையாளர் வினோத்குமார், எஸ்.என்.எஸ்.ஏஜென்சி சதீஷ்குமார், இன்ஜினியர் முகமது நபிஸ், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் பிலால், எம்.கே.எஸ்.பிரிக்ஸ் உரிமையாளர் முகமது காசிம் சரபத் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ