உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மானிய திட்டங்களுக்கு அழைப்பு

மானிய திட்டங்களுக்கு அழைப்பு

வேடசந்துார்: வேடசந்துார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி அறிக்கை:சொட்டு நீர் பாசனம் அமைக்க உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து வேளாண்மை திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் ரூ.60 மதிப்புள்ள ஆறு வகை காய்கறி விதை தொகுப்பு அல்லது ரூ.நுாறு மதிப்புள்ள 3 வகையான பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு குழு மானியத்தில் வழங்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் மா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, தக்காளி, வெங்காயம், நடவுசெடிகள், விதைகள் 40 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன,என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி