பட்டாசு கடைகள் அமைக்க அழைப்பு
திண்டுக்கல்: மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க அக்.10 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரவணன் கேட்டுள்ளார். அவரது செய்தி குறிப்பு : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு அமைக்க உரிமம் பெற மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும், https://www.tnesevai.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா ,ஆவணங்களுடன் அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிம கட்டணம் ரூ.500 ஐ பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியதற்கான அசல் ரசீதினை இணைக்க வேண்டும். இடத்தின் உரிமையாளர் எனில் அதற்குரிய வருவாய்த்துறை ஆவணங்கள், நடப்பு நிதியாண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகைக் கட்டடம் எனில் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையா ளரிடம் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் பெறப்பட்ட பிரமாண வாக்குமூலம், புகைப்படம், முகவரிச்சான்று உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அக். 10 க்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.