மேலும் செய்திகள்
கொடைக்கானலில் இதமான சீதோஷ்ண நிலை
27-Jan-2025
கொடைக்கானல் : தரைப்பகுதியில் நிலவும் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க குளு குளு நகரான கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். இங்கு நேற்று காலை முதல் வெயில் பளிச்சிட்டு இதமான சூழல் இருந்தது. மதியத்திற்கு பின் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. இதையடுத்து பயணிகள் இங்குள்ள பிரையன்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, வனச் சுற்றுலாத்தலம், கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையத்தை ரசித்தனர். இங்குள்ள அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
27-Jan-2025