உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டுப்படுத்தலாமே; சமையல் காஸ் சிலிண்டர் விநியோகிக்க கூடுதல் கட்டணம் வசூல்; பில் தொகை மேல் கூடுதல் பணம் கேட்பதால் நுகர்வோர் பாதிப்பு

கட்டுப்படுத்தலாமே; சமையல் காஸ் சிலிண்டர் விநியோகிக்க கூடுதல் கட்டணம் வசூல்; பில் தொகை மேல் கூடுதல் பணம் கேட்பதால் நுகர்வோர் பாதிப்பு

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை , வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன.இந்நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலையில் மாற்றம் செய்கின்றன.ஏப்.8 வரை வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் ரூ.845 க்கு விற்பனையானது. அதன் பின்பு ரூ.50 அதிகரித்து ரூ.8௯5க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் சுற்றிய கிராம பகுதிகளுக்கு திண்டுக்கல், ஒட்டன் சத்திரம் பகுதிகளில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.வீடுகளுக்கு சென்று சிலிண்டரை கொடுப்பவர்கள் டோர் டெலிவரிக்கென ரூ. 50 அதிகமாக வசூலிக்கின்றனர். இதற்கு ரசீது கிடையாது.இதனால் உபயோகிப்பாளர்களுக்கும் டோர் டெலிவரி செய்பவர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. டிரான்ஸ்போர்ட் செலவு எனகூறி வசூல் செய்கின்றனர்.இதன் மூலம் உரிய ரசீது இல்லாமல் பல ஆயிரம் ரூபாய் வாடிக்கையாளர்களிடம் பறிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
ஏப் 26, 2025 21:03

இந்தப் பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது ...... தமிழகத்தில் மட்டுமில்லை ..... அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் பிரச்னைதான் ....


K.n. Dhasarathan
ஏப் 26, 2025 12:28

ஐயா இதற்க்கு தீர்வு டீலரிடம்தான் உள்ளது, டீலர்கள் பில் போடும்போதே 50 ரூபாய் பிடித்து விடுகிறார்கள், " டெலிவரி சார்ஜ் " என்கிற பெயரில், அதை முதலில் நிறுத்துங்கள் டீலர்களே அங்கேயும் கொடுத்து பிறகு டெலிவரி வருபவரிடமும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது, எனவே டீலர்கள் டெலிவரி சார்ஜ் பணத்தை பிடிப்பதை நிறுத்த வேண்டும், செய்வார்களா ? இது ஐ.ஓ.சி. அதிகாரிகளுக்கும் தெரியும், அவர்களும் உடந்தை, இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா ? ஆனால் மீட்டிங் போட்டு நீங்கல் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டாம் என்று கிளிப்பிள்ளை போல மக்களுக்கு சொல்வார்கள், அலுவலகத்தில் பிடிப்பதை நிறுத்த முடியுமா ? நிறைய பேருக்கு தெரியாது. அதனால் தீர்வு டீலர் குறைப்பதுதான்.


Yuvaraj Velumani
ஏப் 26, 2025 10:06

டீலர்கள் திருடும் முறை


Rajan A
ஏப் 26, 2025 08:28

இங்கு மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் நடக்கிறது. டீலரிடம் புகார் செய்தால், அவர்கள் இஷ்டப்பட்டால் கொடுங்கள், கட்டாயம் இல்லை. டெலிவரி கொடுப்பவர்கள் சார் வெய்யில், சாப்பாட்டுக்கு இல்லை, சம்பளம் குறைவு என்று ஒப்பாரி வைக்கிறார்கள். வீடு வரை டெலிவரி செய்ய பணம் வாங்கும் டீலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


xxxx
ஏப் 26, 2025 05:42

எல்லா இடங்களிலும் இது போல தான் உள்ளது ..... இதை அரசு தடுக்காத ....


முக்கிய வீடியோ