உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பராமரிக்கலாமே: சேதமான அரசு கட்டடங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை இல்லாததால் தினம் பீதியில் மக்கள்

பராமரிக்கலாமே: சேதமான அரசு கட்டடங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை இல்லாததால் தினம் பீதியில் மக்கள்

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நிழற்குடை கட்டடங்கள், அரசு பள்ளி கட்டடங்கள், பொது விநியோக கடை, அங்கன்வாடி, ஊராட்சி மின்மோட்டார் அறை, கலையரங்க கட்டடங்கள், நுாலக கட்டடம், அரசு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் என பெரும்பாலான அரசு கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதுபோன்ற சேதமான கட்டடங்களை கண்டறிந்து முறையாக பராமரிக்காததால் விபத்து அபாயம் உள்ளது. கட்டடங்களில் கூரை, உட்புற சுவர்கள் சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் விபத்து, உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அரசு கட்டிக் கொடுத்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடங்கள் பெரும்பாலானவை மக்கள் குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளது.இதில் உயிர் பயத்துடன் மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர். சேதமான அரசு கட்டடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி