வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது வயல்வெளிகளிலும் அரசின் மெத்தனத்தை காட்டும் நிகழ்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கேபிள் ஒயர்கள் தாழ்வாக தொங்குவதால் விபத்து அபாயம் உருவாகி உள்ளது. மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு இதன் மீது கவனம் செலுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். மாவட்டத்தில் அரசு, தனியார் பங்களிப்புடன் வீடுகள், கடைகளுக்கு கேபிள் ஒயர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பலத்த காற்றுக்கு நிலை கொள்ள முடியாமல் ரோடுகளில் தாழ்வாக தொங்கும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். கவனம் சிறிது தவறினாலும் டூவீலர், சைக்கிள் உள்ளிட்டவற்றில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். கேபிள் ஓயர்கள், மின் கம்பங்களுடன் சேர்த்து கட்டப்படுவதால் அதிக மழை, காற்று வீசும்போது ஒயர்கள் ஒன்றோடொன்று உரசி மின் விபத்துக்கும் வழிவகுக்கிறது. ரோடுகளில் தாழ்வாக தொங்கும் கேபிள் ஒயர்களை தாங்கும் வகையில் தனியே கம்பங்கள் நட்டு குறிப்பிட்ட உயரத்தில் நிலைநிறுத்த வேண்டும். நீளம் அதிகமாக உள்ள கேபிள் ஒயர்களை மின்கம்பத்தோடு கட்டி வைக்காமல் ஜங்சன் பாயிண்ட் அமைத்து அதோடு சேர்ந்திருக்கும்படி பாதுகாப்பாக கட்டி வைக்கலாம். மழைக்காலம் தொடங்கவிருப்பதால் இனி காற்றும் அதிகமாகவே இருக்கும். , முன்னெச்சரிக்கயைாக தாழ்வாக தொங்கும் கேபிள் ஒயர்களை கண்டறிந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து இல்லாத வகையில் நிலை நிறுத்த வேண்டும். ........ நடைமுறைப்படுத்துங்க கேபிள் ஒயர்கள் மெல்லியதாக இருக்கும். காற்றுக்கு தாழ்வாக கீழே தொங்கிக்கொண்டிருந்தாலும் கண்ணுக்கு தெரிவதில்லை. பகல் நேரங்களில் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டால் சரிசெய்வதற்கும், கீழே தொங்கும் ஒயர்களை உயரத்தில் கட்டுவதற்கும் வாய்ப்புகள் இருக்கும். இரவு நேரத்தில் அதற்கான சாத்தியங்கள் குறைவு. அந்த நேரம் டூவீலர்களில் யாரும் வந்தால் கூட விபத்தில் சிக்கி பெருங்காயம் ஏற்படுத்தும் நிலை உருவாகிறது. கேபிள் ஒயர்களை மின்கம்பத்தோடு சேர்த்துக்கட்டுவதை தவிர்க்கவேண்டும். குறைந்த உயரம் நிர்ணயித்து அதற்கேற்றவாறு கம்பங்கள் நிலைநிறுத்திகேபிள் ஒயர்களை நடைமுறைப்படுத்தவேண்டும் . -கோவிந்தராஜ், ஓய்வு அலுவலர், திண்டுக்கல்.
இது வயல்வெளிகளிலும் அரசின் மெத்தனத்தை காட்டும் நிகழ்வு