அகற்றலாமே n விபத்துக்கு வழி தரும் மரக் கிளைகள்,பேனர்களை n மழை, காற்றின்போது கீழே விழுவதால் விபரீதம்
திண்டுக்கல்: மழை, காற்றின் காரணமாக கீழே விழுந்து விபத்து ஏற்படுவதால் ரோட்டையொட்டி உள்ள மரங்களின் கிளைகள், உயரத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாவட்டத்தில் ஒரு மாதமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதோடு பனிப்பொழிவு, காற்றுடன் கூடிய மழையும் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழமையான, பட்டுப்போன மரங்களின் கிளைகள் , சிக்னல்கள் ,கட்டடங்களில் மாடிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக சிக்னல்கள், சென்டர் மீடியன்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் எப்போது வேண்டுமானலும் விழுந்து விபத்தை ஏற்படுத்தி விடும் அபாயத்தில் உள்ளது. நகரின் எல்லை ,முக்கிய கடைவீதிப்பகுதிகளில் கட்டடங்களில் மாடிகளில் பல அடி உயரத்தில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இரும்பு கம்பிகளால் வைக்கப்பட்டுள்ள இந்த போர்டுகள் விழுந்து விடவும் வாய்ப்பிருக்கிறது. தொடர் மழையால் கட்டடங்களே இடிந்த விழும் நிலையில் அசம்பாவிதங்கள் நேரும் முன் அதன் உறுதித்தன்மையை சரிபார்த்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ரோட்டோரங்களில் பேனர்களை வைப்பதையும் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். கொடைக்கானல், சிறுமலை செல்லும் மலைப்பாதைகளில் ரோட்டை ஒட்டி அமைந்துள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட வேண்டும். மாவட்டம் முழுவதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமாகிறது.