உள்ளூர் செய்திகள்

மின்தடை ரத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் வடக்கு மின் பகிர்மானத்தில் உதவி செயற்பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ள விட்டல்நாயக்கன்பட்டி, நல்லமனார்கோட்டை, தாடிக்கொம்பு, தாமரைபாடி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் இன்று (அக்.,9) மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். திண்டுக்கல் மாவட்டத்தின் அருகில் உள்ள திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. எனவே இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுவதுடன் இப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என செயற்பொறியாளர் முருகேஸ்பதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை