உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே குறைந்தழுத்த மின் பிரச்னைக்கு தீர்வு கோரி பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வத்தலக்குண்டு அருகே பண்ணைப்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த நான்கு மாதமாக குறைந்தழுத்த மின்சாரம் மட்டுமே கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேன், மிக்சி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஆழ்துளை மின்மோட்டார் போன்ற சாதனங்கள் பழுதடைந்ததால் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாமல் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர். புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க ஊர் பொதுமக்கள் நிதி திரட்டி ரூ.80 ஆயிரம் மதிப்பில் மேடை அமைத்தும் கொடுத்துள்ளனர். இருப்பினும் தற்போது வரை புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கவில்லை. மின் பிரச்னையை சீர் செய்யாததை கண்டித்து அப்பகுதி பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து மின்வாரியத்தினரிடம் கேட்டபோது அப்பகுதியில் உள்ள குறைந்தழுத்த மின் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புதிய டிரான்ஸ்பார்மர் வந்தவுடன் பொருத்தப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !